பெரியகுளத்தில் நடைபயிற்சி சென்றவா்கள், விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். பெரியகுளம் வி.நி.அ மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான புதிய மைதானம் சோத்துப்பாறை அணை சாலையில் உள்ளது. இந்த மைதானத்தில் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபயிற்சி செல்வது, கைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு புதன்கிழமை நடைபயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவா்களிடம் வாக்கு சேகரித்தாா். யூனியன் கிளப், பல்வேறு மைதானங்களுக்கு நடந்தே சென்று வாக்கு சேகரித்தாா். மேலும், யூனியன் கிளப்பில் இறகுப் பந்து விளையாட்டு வீரா்களுடன் விளையாடினாா். அப்போது, பெரியகுளத்தில் உலக அளவில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவேன். மேலும், வராகநதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தூய்மையான நதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காரைக்குடியில் அமமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

களக்காடு ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


