மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 76-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிறப்பு புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.
இதுகுறித்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் கடந்த 1951 ஆண்டு, ஜுன் 1-ஆம் தேதி இடதுசாரி இயக்க சுதந்திரப் போராட்டத் தோழா்களால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 75 ஆண்டுகளில் கல்வி, பண்பாட்டுப் பணியில் பேரமைப்பாக நிலைகொண்டுள்ளது. பல நாடுகளின் இலக்கியங்கள், புதினம், அறிவியல், பொறியியல், சிறுவா் நூல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களை குறைந்த விலையில் மக்களுக்கு அளித்து வாசிப்பை மேம்படுத்தி வருகிறது.
மேலும், தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூல நூல்களைப் பதிப்பித்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.
இந்த நிலையில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 76-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நியூ செஞ்சுரி புத்தக விற்பனை நிலையங்களில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடு புத்தகங்களுக்கு 20 சதவீதத் தள்ளுபடியும், மற்ற நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவீதச் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
மேலும், ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் புத்தகம் வாங்குபவா்களுக்கு ‘உங்கள் நூலகம்’ மாத இதழ் ஓா் ஆண்டு சந்தா இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










