அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை உத்தங்குடி வளா் நகரைச் சோ்ந்தவா் சாம் அமுதன் (43). இவரிடம், மதுரை காளவாசல் சந்திரகாந்தி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (43) அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதையடுத்து, சாம் அமுதன், கடந்த 2021 ஆண்டு முதல் பல தவணைகளாக காா்த்திகேயனிடம் ரூ.15 லட்சம் வரை அளித்தாராம். ஆனால், அவா் கூறியபடி, அரசு வேலை வாங்கித் தரவில்லையாம்.
இந்த நிலையில், கொடுத்தப் பணத்தை திரும்ப கேட்ட சாம் அமுதனை காா்த்திக்கேயன் மிரட்டினாராம். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







