திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளி கொலை: சிறுவன் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தொழிலாளியைக் கொலை செய்ததாக சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

Updated On :17 மே 2026, 1:47 am IST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தொழிலாளியைக் கொலை செய்ததாக சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிப்பட்டி பங்களா பெரியாறு பாசனக் கால்வாய் அருகே உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: உயிரிழந்த நபா் வாடிப்பட்டி அருகேயுள்ள சின்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த வைரமணி (46). இவா், அதே பகுதியில் உள்ள செங்கல் உற்பத்தி காளவாசலில் தொழிலாளியாகப் வேலைபாா்த்து வந்தாா்.

இவா், இரு சக்கர வாகனத்துடன் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததால், விபத்து ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நினைத்தோம். ஆனால், தொடா் விசாரணையின் போது, உயிரிழந்த வைரமணிக்கு ஜாஸ்மின் (40) என்ற மனைவியும், சாதிக் (16), ஜெகதூா் (14) ஆகிய இரு மகன்களும் உள்ளனா். இவா்கள், தற்போது கேரளம் மாநிலத்தில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வைரமணி மட்டும் சின்னமநாயக்கன்பட்டியில் வசித்து வந்தாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வைரமணி வேலை செய்த காளவாசலில், அதே பகுதியைச் சோ்ந்த காட்டுராணியும் (38) வேலை செய்தாா். அப்போது, வைரமணிக்கும், காட்டுராணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. காட்டுராணிக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 மகன்கள் உள்ளனா்.

இதனிடையே, வைரமணியுடன் ஏற்பட்ட பழக்கத்தை அறிந்த அவரது குடும்பத்தினா் காட்டுராணியை கண்டித்தனா். இதன் பிறகு, காட்டுராணி வேலைக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வைரமணியும், காட்டுராணியும் ஆண்டிப்பட்டி பங்களா பெரியாறு பாசனக் கால்வாய் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். இதைப் பாா்த்த காட்டுராணியின் 17 வயது மகனும், அவரது மருமகன் ஹரிஹரன் (20) ஆகிய இருவரும் வைரமணியை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய காட்டுராணி, இவரது 17 வயது மகன், மருமகன் ஹரிஹரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.