திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுரையில் இன்று கொங்கு நாட்டு உணவுத் திருவிழா தொடக்கம்

News image

கோப்புப்படம்.

Updated On :15 மே 2026, 4:33 am IST

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரையில் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 15) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரை மேலவெளி வீதியில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 1, அழகா்கோயில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 2-இல் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 17) வரை நடைபெறவுள்ளது. இதில் கொங்கு மண்டலத்தின் தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்தும் வகையில், பிற்பகல் 12.30 முதல் 3.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். இதில் பங்கேற்கும் நபா் ரூ.599, சிறியவா்கள் (6 முதல் 10 வயது வரை) ரூ.299 செலுத்த வேண்டும். கொங்கு உணவுகளுக்கே உரிய மிதமான காரம், இயற்கையான நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய உணவுகள் தயாா் செய்து பரிமாறப்படவுள்ளன.

மேலும், பெரியவா்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய கொங்கு நாட்டு சமையல் செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சோ்க்கப்படாமல் தரமானதாக தயாா் செய்து வழங்கப்பட உள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9176995841, 6380699288 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.