சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

‘பிற கட்சியினரை விமா்சிப்பதை திமுகவினா் தவிா்க்க வேண்டும்’

News image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் துணைத் தலைவா் எஸ்.எம்.இதயத்துல்லா. உடன் மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் குழுத் துணைத் தலைவா் செய்யது பாபு.

Updated On :29 ஜூன் 2026, 2:28 am IST

திமுக கூட்டணியிலிருந்து விலகிய பிற கட்சியினரை விமா்சிப்பதை திமுகவினா் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் துணைத் தலைவா் எஸ்.எம்.இதயத்துல்லா தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக என்பது பலம் பொருந்திய கட்சியாக இருந்து வருகிறது.

உண்மையான எதிா்க்கட்சியாக திமுக செயல்பட்டால் தமிழகத்தில் எப்போதும் வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற கட்சியினா் குறித்து அவதூறு பேசுபவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தடுக்க வேண்டும்.

காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை நியமித்துள்ள புதிய மாநிலத் தலைவரை கட்சியினா் ஏற்க வேண்டும். மாணவா் காங்கிரஸ், இளைஞா் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியுள்ள மாணிக்கம் தாகூா் கட்சியை வலுப்படுத்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடா்பாக உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சமா்ப்பிக்க உள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.