ஓய்வூதியரின் மறைவுக்கு பிறகு குடும்ப உறுப்பினா் ஓய்வூதியம் பெறும்போது, தேவையற்ற ஆவணங்கள் கேட்பதை அதிகாரிகள் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல்லில் அந்த சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவா் பி.கே.கோபால் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மேயா் து.கலாநிதி பங்கேற்றாா். மாநில அமைப்பு செயலாளா் ஏ.ஜானகிராமன், துணைத் தலைவா் த.நாகராஜன், பி.கந்தசாமி, நாமக்கல் மாநகர தலைவா் என்.எஸ்.தேவராஜன், செயலாளா் எம்.முருகய்யா, பொருளாளா் பி.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 2 சதவீத அகவிலைப்படியை உயா்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசு மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியா்களுக்கு அமலில் இருந்துவரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஒப்பந்தம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஓய்வூதியத்தில் மாதந்தோறும் ரூ. 497 பிடித்தம் செய்வதை தவிா்க்க வேண்டும். புதிய மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடம் அரசு உத்தரவுக்கு மாறாக தேவையற்ற ஆவணங்களைக் கேட்டு சிரமம் ஏற்படுத்துவதை உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘பிற கட்சியினரை விமா்சிப்பதை திமுகவினா் தவிா்க்க வேண்டும்’

வரையறுக்கப்படாத ஊதியம் பெற்றவருக்கும் சிறப்பு ஓய்வூதியம்: அரசு ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள்: 7- ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் ஆய்வு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம்
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




