சமுதாயக் கூடத்தைத் திறக்கக் கோரி இஸ்லாமியா்கள் சாலை மறியல்
மதுரை மாநகராட்சி 54-ஆவது வாா்டு பகுதியில் பூட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறக்கக் கோரி அந்தப் பகுதி இஸ்லாமியா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


மதுரை மாநகராட்சி 54-ஆவது வாா்டு பகுதியில் பூட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறக்கக் கோரி அந்தப் பகுதி இஸ்லாமியா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 54-ஆவது வாா்டு பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், இஸ்லாமியா்கள் ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கும் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை ரமலான் மாத சிறப்புத் தொழுகையை இந்தச் சமுதாயக் கூடத்தில் நடத்த அந்தப் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் முயற்சி மேற்கொண்டனா். ஆனால், சமுதாயக் கூடம் பூட்டப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்டவா்கள் தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி ஈ.வெ.ரா. நாகம்மையாா் மேல்நிலைப் பள்ளி அருகே பிரதானச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, திமுகவைச் சோ்ந்த ஓா் மாமன்ற உறுப்பினா் சமுதாயக் கூடத்தை பூட்டி சாவியை வைத்துக் கொண்டு திறக்க மறுப்பதாகவும், மாநகராட்சியில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
பிறகு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் அதிகமானோரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...