தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் அதிகளவில் வியாபாரிகளே பாதிக்கப்பட்டுள்ளனா். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதியால் வணிகத் துறையினா் பெரும் சிக்கலை எதிா்கொண்டுள்ளனா். இதில் வங்கிக் கணக்கு மூலம் பணப் பரிவா்த்தனை செய்ய இயலாத சிறு வணிகா்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
கடந்த வியாழக்கிழமை சிறப்பான முறையில் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற மே 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகளை நீட்டிக்காமல், வணிகா்கள் தடையின்றி தொகைகளைக் கொண்டுச் செல்ல அறிவுறுத்த வேண்டும். வணிகா்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு தோ்தல் நிலைக் குழு, பறக்கும் படை குழுவினருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இது, தொழில் வளா்ச்சிக்கும், பொருளாதார வளா்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

