சாதனை செய்யாதவர்களுக்கும் விருதுகள்!
ராமநாதபுரம், ஜன. 28: ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில் பெரும்பாலானவை எந்தச் சாதனையும் செய்யாத நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்


ராமநாதபுரம், ஜன. 28: ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில் பெரும்பாலானவை எந்தச் சாதனையும் செய்யாத நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து பார்வையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் சீதக்காதி-சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணி செய்தவர்களுக்கும், விளையாட்டுத் துறையின் சார்பில் மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்துக்குப் பெருமைசேர்த்தவர்களுக்கும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் 12 பேருக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஜூனியர் ரெட்கிரா் என்ற அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பள்ளிகளில் செயல்பட்டுவரும் சாரணர் இயக்கம், நுகர்வோர் இயக்கம், தேசிய பசுமைப் படை உள்ளிட்ட வேறு எந்த அமைப்புக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை.
இது தவிர, கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 57.85 சதவிகிதமும், பிள் 2 பொதுத் தேர்வில் 82.07 சதவிகிதமும் எடுத்த பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதன் தலைமை ஆசிரியர் சண்முகநாதனிடம் விருது வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இளஞ்செம்பூர், எ்.தரைக்குடி, கிடாத்திருக்கை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளும், 13 தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 16 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றன.
அதே போல, பிள் 2 பொதுத் தேர்வில் உச்சிநத்தம், டி.எம்.கோட்டை ஆகிய இரு அரசுப் பள்ளிகள் உள்பட 13 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றன. மெட்ரிக். தேர்வில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 24 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருந்தன.
இவற்றில் கடந்த ஆண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற எந்தப் பள்ளிக்கும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படாமல், குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிக்கும், ஜூனியர் ரெட்கிரா் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த மாணவ,மாணவியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விருதுகள் பெறுவோர் பட்டியலில் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களுக்கும் என்ன காரணங்களுக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன என்ற விவரம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில்அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பெயரும், அவர்களது பணி பற்றிய விவரங்களும் மட்டுமேஇடம் பெற்றுள்ளன. என்ன காரணத்திற்காக விருதுகள் வழங்கப்படுகிறது என்ற விவரம் எதுவும் இல்லை.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது கூறியதாவது:
நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை தான். தியாக உணர்வோடு பணிபுரியும் பல ஆசிரியர்கள் உள்ள போது ஒரே அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டது எப்படி எனத் தெரியவில்லை. அது குறித்து விசாரிக்கிறேன். நான் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப்
பொறுப்பேற்ற ஒருசில நாட்களில் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வேண்டியதாகி விட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...