ராமநாதபுரம், ஜன. 13: மது அருந்தி வாகனம் ஓட்டுபவரைக் கண்டறியும் வகையில் இரு சக்கர வாகனத்தில் பொருத்தும் வகையிலான ஒரு புதிய கருவியை ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கண்டுபிடித்து அதனை அறிவியல் கண்காட்சியில் வைத்தார். மாநில அளவில் அவரது அரிய கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வருபவர் மாணவர் முனீஸ்வரன் (12). குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களைக் கண்டறிய இரு சக்கர வாகனத்தில் பொருத்தும் வகையில் கருவி ஒன்றைக் இவர் கண்டு பிடித்துள்ளார்.
இக்கருவியை விருதுநகரில் அண்மையில் நடைபெற்ற 37-வது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தார். மாநில அளவில் 92 காட்சிப்பொருள்கள் இடம்பெற்றிருந்தும், இவரது கண்டுபிடிப்பு 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
மாநில அளவில் தேர்வு பெற்று திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன்,தலைமை ஆசிரியர் ஜெ.ஜோபிரகாஷ்.உதவித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ், வழிகாட்டி ஆசிரியராக இருந்த மணிவண்ணன் ஆகியோர் புதன்கிழமை இவரை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைத்து பாராட்டினார்கள்.
இது குறித்து மாணவர் முனீஸ்வரன் கூறியதாவது:
வாகனம் ஓட்டும்போது அதில் ஒரு சிறிய கருவி பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அக்கருவி அதனைக் கண்டறிந்து வாகனம் இயங்காமல் செய்து விடும். இதனால் மது அருந்தியிருப்பவர் வாகனத்தை ஓட்ட முடியாமல் போய்விடும்.
இதுதவிர எதிர்வரும் வாகனத்தின் வெளிச்சம்பட்டு கண் கூசும்போது அதிக விபத்து ஏற்படுவதையும் தடுக்கும் வகையில் தானாகவே இயங்கி டிம் மற்றும் பிரைட் கண்ட்ரோலராகவும் செயல்படும் எனவும் முனீóஸ்வரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.ஜோபிரகாஷ் கூறியதாவது:
திருப்புல்லாணியில் வசிக்கும் சாதாரண விவசாயி மகன் முனீஸ்வரன். இவர் தனது கண்டுபிடிப்பு மூலம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும், இவரது கண்டுபிடிப்பு இடம்பெறும் என்று ஜெ.ஜோபிரகாஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

