தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராமநாதபுரத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் கால்நடைகள்

ராமநாதபுரம், ஜன. 3:    மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நகரிலும் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் அதிகளவில்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:43 am

ராமநாதபுரம், ஜன. 3:    மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நகரிலும் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் அதிகளவில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிகின்றன.

 நகர் காவல்நிலையம் முதல் பாரதி நகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வது விபத்துக்களுக்கும் காரணமாகின்றன.

       ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் ஆட்சியர்,டி.ஐ.ஜி. எஸ்.பி,அலுவலகங்கள்,சேதுபதி-சீதக்காதி விளையாட்டரங்கம்,அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன. உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன.

வியாழக்கிழமை காலையில் ஆட்சியர் அலுவலக வரவேற்பு அறைக்குள்(ஆவணக்காப்பக பிரிவு பகுதிக்குள்) பசுமாடுகள் நுழைந்து உள்ளே யாரும் போகமுடியாதபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன.

அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளும் கூட்டம், கூட்டமாகத் திரிகின்றன. பன்றிகள் தொடர் சாவின் காரணமாக அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

         இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற தலைவர் கவிதா கதிரேசன் கூறியதாவது: சுற்றித்திரியும் கால்நடைகளை மொத்தமாகப் பிடித்து எங்கே போய் கட்டிப்போடுவது என்று தெரியவில்லை. பன்றிகளையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.

  இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜ்புர்ரகுமான் கூறியதாவது:

நகரில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு புதன்கிழமை தான் நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்.

விரைவில் அனைத்து கால்நடைகளையும் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிகளை அடிக்கடி பிடித்து திருச்சுழி, பார்த்திபனூர் பகுதிகளில் ஆள்நடமாட்டமில்லாத காடுகளில் மீண்டும் வந்து விடாதபடிகொண்டு போய் விட்டு விடுகிறோம் என்று ஆணையர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.