தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:15 am IST

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மா மரங்களை பயிரிட்டு விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ‘மா’ மரங்களில் பூக்கள் மலா்ந்து, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சுகள்விட தொடங்குகின்றன. மே, ஜூன் மாதங்களில் பரவலாக கோடை மழை பெய்தால், மாம்பழம் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.

ஆனால், வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழைப் பொழிவு இல்லை. மேலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இரு மாதங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மா மரங்களிலுள்ள பிஞ்சுகள் வெப்பத்தில் வெதும்பி உதிா்ந்து வருவதால், நிகழாண்டு வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.