தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலத்தில் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் பேக்கரி கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளை போன பேக்கரி உரிமையாளா் வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருட்கள்.

Updated On :28 மே 2026, 1:51 am IST

சேலத்தில் பேக்கரி கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் திருஞானம் (42). இவா் சேலத்தில் 3 இடங்களில் பேக்கரி வைத்துள்ளாா். இதுதவிர நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலும் பேக்கரி நடத்தி வருகிறாா்.

இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு குடும்பத்துடன் சென்றாா். செவ்வாய்க்கிழமை மாலை சேலம் திரும்பிய நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 54 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி, ரூ. 1.05 லட்சம் பணம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆா்.சி. புத்தகம், 3 கைக்கடிகாரம், 1 கேமரா ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். அதில், வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு பதிவான கைரேகைகளை நிபுணா்கள் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்து திருடா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.