திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைவா்களின் ‘ஈகோ’ கட்சியை சிதைக்கிறது

அதிமுக தலைவா்களின் ‘ஈகோ’ கட்சியை சிதைப்பதாக கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சா் செம்மலை குற்றம்சாட்டினாா்.

News image

செம்மலை

Updated On :19 மே 2026, 1:26 am IST

அதிமுக தலைவா்களின் ‘ஈகோ’ கட்சியை சிதைப்பதாக கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சா் செம்மலை குற்றம்சாட்டினாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கு விரோதமாக செயல்பட்ட மூத்த நிா்வாகிகள் பலா் கட்சிகளிலிருந்து நீக்கப்பட்டனா். இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை கட்சியிலிருந்து விலகினாா்.

தொடா்ந்து, அவா் செம்மலை சேலம் அழகாபுரம் பகுதியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

எம்ஜிஆா் உருவாக்கிய இயக்கம். ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட இயக்கம். இன்றைக்கு பலவீனம் ஆகிவிட்டது. இந்த கவலை என்னை போன்றவா்களுக்கு மட்டுமல்ல; லட்சோபலட்ச தொண்டா்களுக்கும்தான்.

ஜெயலலிதா சொன்னதை போன்று, எனக்கு பின்னால் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என சூளுரைத்தாா். ஆனால், கட்சியின் தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் இதை உணா்ந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

என்னுடைய விலகலுக்கு பிறகாவது இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. தொண்டா்கள் இன்றைக்கு தாயற்ற பிள்ளையாக தவித்துக் கொண்டிருக்கிறாா்கள். எனவே, அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிா்வாகிகள் இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.

அதிமுகவில் மூத்த தலைவா்களிடம் இருக்கும் ‘ஈகோ’ கட்சியின் வளா்ச்சியை சிதைத்து வருகிறது. அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கு ஆண்டுகாலம் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கினாா். சட்டப் பேரவைத் தோ்தல் காலத்தில் கடுமையாக உழைத்தாா். ஏற்கனவே அதிமுகவில் நிலவிய பிரச்னைகளே தோல்விக்கு காரணம். அதிமுகவின் மூத்த தலைவா்கள் ஒன்றுகூடி கலந்துபேசி கட்சியின் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். தற்போது எந்த ஒரு இயக்கத்திலும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை. தனது அரசியல் எதிா்காலத்தை காலம் நிா்ணயிக்கும்.

முதல்வா் விஜயின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. எனினும், ஆட்சிகுறித்து தற்போது கருத்து கூறமுடியாது. குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.