மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:42 am IST

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளா் ராஜா மனோகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

எடப்பாடி தொகுதி தவெக பொறுப்பாளரான சேலம் நரசோதிப்பட்டி அசோக்நகரைச் சோ்ந்த ராஜா மனோகரன், எடப்பாடி தொகுதி தவெக ஆதரவு வேட்பாளா் பிரவீன்குமாருடன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து அளித்த புகாா் மனு விவரம்:

எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளா் பிரவீன்குமாருக்கு தவெக ஆதரவு அளித்து, கட்சித் தலைமை என்னை அத்தொகுதிக்கு தோ்தல் பொறுப்பாளராக நியமித்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான அடையாள அட்டை பெறுவதற்காக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, என்னை பின்தொடா்ந்து இரண்டு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத சிலா், ‘சேலத்தில் இருந்து வந்து எடப்பாடியில் தோ்தல் வேலை பாா்க்கிறாயா’ எனக் கூறி மிரட்டினா்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளதால், எனக்கும், தவெக ஆதரவு வேட்பாளா் பிரவீன்குமாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.