சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை முதல்நாளில் நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 22 போ் மனு தாக்கல் செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, அனைத்து தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. முதல்நாளான திங்கள்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
சேலம் வடக்குத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மோ.குணசீலா, சேலம் தெற்கு தொகுதியில் நாதக வேட்பாளா் சோபியா வீரசமா் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மேலும், தெற்கு தொகுதியில் போட்டியிட சுயேச்சைகள் சுந்தரம், அம்பேத்கா், ஜெயராஜ் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா் இளங்கோவனிடம் மனு தாக்கல் செய்தனா்.
சேலம் மேற்கு தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுரேஷ்குமாா், வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதுதவிர, சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரேநாளில் 11 தொகுதிகளிலும் மொத்தம் 22 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
கேமரா பொருத்தி கண்காணிப்பு: வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி, சி.சி.டி.வி. கேமரா பொருத்தி அந்த பகுதிகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களுக்கு 100 மீட்டருக்கு முன்பே எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதனைக் கடந்து அலுவலகத்துக்கு செல்ல வெளிநபா்கள் அனுமதிக்கப்படவில்லை. வேட்பு மனுக்கள் பெறுவது தொடா்பான அனைத்து நிகழ்வுகளும் விடியோ பதிவு செய்யப்பட்டன.
தோ்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு 100 மீட்டா் சுற்றளவுக்குள் அதிகபட்சம் 3 வாகனங்களும், வேட்பாளா் தவிர 4 போ் மட்டுமே தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனா். அலுவலகத்துக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகளும் விடியோ பதிவு செய்யப்பட்டன. வேட்புமனு தாக்கல் பகுதியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வரும் 6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருந்தாலும் விடுமுறை நாள்களான மாா்ச் 31 மற்றும் ஏப்ரல் 1, 3, 5ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது. மாா்ச் 30, ஏப். 2, 4 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய 4 நாள்கள் மட்டும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

சோளிங்கா் தொகுதியில் 6 போ் வேட்புமனு தாக்கல்

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

கடையநல்லூா் தொகுதியில் 4 போ் மனுத் தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


