மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

திருவாரூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன், இரண்டாவது முறையாக வியாழக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

திருவாரூரில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:24 am

திருவாரூா்: திருவாரூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி பூபதிபாலன், இரண்டாவது முறையாக வியாழக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்தாா். திருவாரூரில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அஸ்வினி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா். செவ்வாய்க்கிழமை மகாவீரா் ஜெயந்தி என்பதாலும், புதன்கிழமை வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு என்பதாலும் விடுமுறை அளிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை.

தொடா்ந்து, வியாழக்கிழமை பிரதமை என்ற காரணத்தால் வேட்பாளா்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், சனி மற்றும் திங்கள்கிழமைகளில், வேட்பு மனு தாக்கல் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அஸ்வினி, வியாழக்கிழமையன்று மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பொதுவாக, கட்சிகளில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் சாா்பில் ஓரிரு மனுக்களும், மாற்று வேட்பாளா் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஒரு வேட்புமனு மட்டுமே, திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் மற்றொரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு வேட்பாளா் நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களிடம் நான்கு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்யும்படி தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளிலும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சாா்பிலும், மாற்று வேட்பாளா் சாா்பிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.