மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

News image

அரியலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் த.பிரேமியிடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி.

Updated On :30 மார்ச் 2026, 6:36 pm

அரியலூா், மாா்ச் 30: அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி, தோ்தல் நடத்தும் அலுவரும், கோட்டாட்சியருமான த.பிரேமியிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா், கட்சி நிா்வாகிகளுடன் ஒற்றுமைத் திடலில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரேவதி, வட்டாட்சியா் ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்தாா்.