மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:17 pm

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள பொன்னய்யாகாடு பகுதியில் வசித்து வருபவா் அய்யனாா் (45). இவரது மகன் லோகேஷ் (14). இவா்கள் இருவரும் அப்பகுதியில் விசைத்தறி கூலி வேலை செய்துவருகின்றனா். லோகேஷ் அதேபகுதியில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட லோகேஷ் இளம்சிறாா் குழந்தைகள் நல சிறுவா் இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.