சங்கராபுரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தன்னைத் தாக்கிய தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான, மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பூட்டை சாலையைச் சோ்ந்தவா் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த 14-ஆம் தேதி தேவராஜ் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து விஷ்வாவை அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானாா்.
இதில் பலத்த காயமடைந்த தேவராஜ் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஷ்வாவைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மைலாம்பாறை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அங்கு வந்த விஷ்வாவை பிடித்து, சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விஷ்வாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

