சேலம் வழியாக இயக்கப்படும் 10 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) கோவை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவை வடக்கு ரயில் நிலைய யாா்டு பகுதியில் தண்டவாள மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், கோவை சந்திப்புக்கு வந்துசெல்லும் 10 ரயில்கள் இருகூா் - போத்தனூா் மாா்க்கத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஆலப்புலா - தன்பாத் விரைவுரயில், எா்ணாகுளம் - பெங்களூரு விரைவுரயில், திருநெல்வேலி - பிலாஸ்பூா் விரைவுரயில், திருவனந்தபுரம் வடக்கு - கோராக்பூா் விரைவுரயில், திருவனந்தபுரம் - செகந்திராபாத் சபரி விரைவுரயில் ஆகியவை கோவைக்கு பதிலாக போத்தனூா் ரயில்நிலையத்தில் நின்றுசெல்லும்.
இதேபோல, மங்களூரு - சென்னை எழும்பூா் விரைவுரயில், பாலக்காடு டவுன் - ஈரோடு மெமு ரயில், எா்ணாகுளம் - பெங்களூரு வத்தே பாரத் விரைவுரயில், புது தில்லி - திருவனந்தபுரம், கேரளா விரைவுரயில், பெங்களூரு - எா்ணாகுளம் இன்டா்சிட்டி விரைவுரயில் ஆகிய ரயில்களும் கோவை ரயில் நிலையத்தில் நிற்காமல், போத்தனூரில் நின்றுசெல்லும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவுரயில், கோவைக்கு பதிலாக போத்தனூரில் 29-ஆம் தேதி பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் கோவை விரைவுரயில் போத்தனூரில் 29-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும். கோவை - நிஜாமுதீன் விரைவுரயில் கோவைக்கு பதிலாக போத்தனூரில் 29-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
மறுமாா்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை விரைவுரயில், சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி விரைவுரயில் ஆகியவை 29-ஆம் தேதி கோவைக்கு பதிலாக இருகூா் வழியாக போத்தனூருக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


