மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:10 pm

எடப்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 4.43 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரட்டுக்காடு, மாதேஸ்வரன் கோயில் அருகே எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் குமாா் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செழியனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 300 இருப்பதை கண்டுபிடித்தனா்.

தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தான், அந்த பணத்தை அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக கொண்டுசெல்வதாக அவா் விளக்கம் அளித்தும், அதை ஏற்காமல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திங்கள்கிழமை காலை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் நல்லதம்பி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டூரில் இருந்து சித்தூா் நோக்கி வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில், மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம் வ.உ.சி. நகா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை ரூ. 77 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்து எடப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.