மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேட்டூரில் ரூ. 4.30 லட்சம் பறிமுதல்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூா் தொகுதியில் ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், மேட்டூரை சோ்ந்த காா்த்திக் (35) உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 4.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நசியனூா் அருகே வில்லரசன்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதாகவும், வங்கி விடுமுறை என்பதால் மூன்று நாள்கள் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டூா் செல்வதாகவும் தெரிவித்தாா்.

ஆனாலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.