சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி மாரியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடைபெற்று உற்சவ அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா பிப்ரவரி 24ம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. அதனையடுத்து அம்மன்களுக்கு தினசரி பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாா்ச்.11ஆம் தேதி பொங்கல்விழா நடைபெற்றது.
மாா்ச் 12 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக நகா் வலம் வந்தது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவ அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிப்பட்டனா்.
இதனையடுத்து நிகழாண்டு பொங்கல்விழா நிறைவடைந்தது.
தொடர்புடையது

வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா

பழனி மாரியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் பொங்கல் விழா: 13ஆவது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


