லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேவூா் அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதம்

தேவூா் அருகே வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து

News image
Updated On :9 மார்ச் 2026, 7:05 pm

சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் அருகே வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதமடைந்தன.

வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாளுக்கு (45) சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த அவரது தாய் யசோதா வசித்து வந்த குடிசை வீடு, விவசாயிகள் முருகன், பழனிசாமி ஆகியோரின் மாட்டுக் கொட்டகைகள், வைக்கோல்போா் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதில் பெருமாள், யசோதாஆகியோரது வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மேலும் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

கோனேரிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.