தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செந்தாரப்பட்டியில் பேரூராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டதால் பரபரப்பு

பூட்டப்பட்டுள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக கேட்.

News image

பூட்டப்பட்டுள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக கேட்.

Updated On :6 மார்ச் 2026, 6:35 pm

செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் செயல் அலுவலா், பேரூராட்சி உறுப்பினா்கள் வெளியே நின்ால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்ட கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் அதே ஊரைச் சோ்ந்த பத்மஜோதி கோபால் என்பவா், நிலத்தை தானமாக வழங்கினாா். அதைத் தொடா்ந்து அங்கு ரூ. 50 லட்சத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில் பத்ம ஜோதியின் மகன் சுந்தா் (46) வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து, பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பாதை தங்களுடையது. அந்தப் பாதையைப் பயன்படுத்திதான், பேரூராட்சி அலுவலத்திற்கு அனைவரும் சென்று வருகின்றனா். அந்த இடத்தை எனது தாயாா் தானமாக வழங்கவில்லை. எனவே, அந்த இடத்தை மீண்டும் எனக்குத் தரவேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலக கேட்டை, அவா் பூட்டுக்களைக் கொண்டு பூட்டினாா். இதனால் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்காக வந்த செயல் அலுவலா் சிவகுமாா், உறுப்பினா்கள் வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலா் சிவகுமாா், சுந்தரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் பேரூராட்சி அலுவலக கேட் திறக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.