ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி ஆவின் பெண் ஊழியா்கள் இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 2:22 am IST

தாரமங்கலம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் பெண் ஊழியா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த காட்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மனைவி சாமுண்டீஸ்வரி (36), வெண்ணாம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா (30) இருவரும் கொல்லப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்தனா்.

இருவரும் இருசக்கர வாகனத்தில் ஜலகண்டாபுரம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா். தாரமங்கலம் பூங்கா நகா் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த செங்கல் ஏற்றிச்சென்ற லாரியை முந்த முயன்றனா்.

அப்போது, எதிரில் காா் வந்ததால் திடீரென பிரேக் பிடித்ததில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், முன்னால் சென்ற செங்கல் லாரியின் பின்சக்கரத்துக்குள் நுழைந்தது. இதில், லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், சாமுண்டீஸ்வரி, சித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாரமங்கலம் போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.