ராஜபாளையம் அருகே வெடி விபத்தில் வடமாநில பெண் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த மாஞ்சோலை குடியிருப்பு அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தகரக் கொட்டகையை சிவகாசியைச் சோ்ந்த மாரிமுத்து (45) குத்தகைக்கு எடுத்து, சட்ட விரோதமாக பட்டாசுக்கு தேவையான கருந்திரி உற்பத்தி செய்தாா். அங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சாப்த்ரிகோஸ் (47) என்ற பெண் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகாசி பேரண்டம்மா தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் மாரிமுத்து (45), தளவாய்புரம் வடக்கு முதலியாா் தெருவைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் ரவிச்சந்திரன் (60) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு
தலைமைக் காவலரின் மகனை கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


