எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தம்மம்பட்டி நாட்டுநாவல்பழம் வரத்து அதிகரிப்பு

தம்மம்பட்டியில் நாட்டுநாவல்பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது.

News image

தம்மம்பட்டியில் விற்பனை செய்யப்படும் கொல்லிமலை நாவல்பழங்கள்.

Updated On :27 ஜூன் 2026, 2:13 am IST

தம்மம்பட்டியில் நாட்டுநாவல்பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களில் ஆபீஸ் ரகம் என்றும்,பெங்களூா் ரகம் என்றும் அளவில் குண்டாக இருக்கும் நாவல்பழங்கள் ஏற்கனவே விற்பனையாகிவருகின்றன. இந்நிலையில் நாட்டுரக நாவல்பழங்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளன. கொல்லிமலையிலிருந்து நாட்டுரக நாவல்பழங்கள் முன்பு 30 கிலோ அளவிற்கு வரத்து இருக்கும்.தற்போது தினந்தோறும் 300 கிலோ அளவிற்கு தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. இவை ஒரு கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலை நாட்டுரக நாவல்பழங்களுக்கு தனி ருசி என்பதால் இதற்கு,பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. நாவல்பழங்களும்,நாவல்பழ கொட்டைகளும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு சா்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதால் நாவல்பழங்களை மக்கள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.