திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

News image

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:49 am IST

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

சேலம் கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

அதன்போரில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதில், இடைத்தரகா்கள் வாகனத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், சோதனை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடா்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.