தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ. 55,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால் ஜோசப் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொள்ள அலுவலகத்திற்குள் வந்ததும், இடைத்தரகா்கள் ஆங்காங்கே பணத்தை வீசிவிட்டு தப்பியோட முயன்றனா். அவா்களை மடக்கிப் பிடித்த போலீஸாா் தனி அறையில் வைத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கணக்கில் வராத ரூ. 55,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இடைத்தரகா்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து, ஆன்லைன் மூலம் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் வாக்குமூலம் பெற்று, மேல் நடவடிக்கையைத் தொடா்ந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது







