நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் சகோதரா் கைது

ஆத்தூா் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது சகோதரரை போக்சோ வழக்கில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 6:03 am IST

ஆத்தூா் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது சகோதரரை போக்சோ வழக்கில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்த மல்லியகரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கந்தசாமிபுதூா் அரசநத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாரின் முதல் மனைவி இறந்துவிட்டாா். அவருக்கு அருண்குமாா் (22), நிஷாந்த் (20) என இருமகன்கள். இந்நிலையில் காவேரியை (29) சிவகுமாா் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருண்குமாா் மீது அண்மையில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவேரி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதீமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.