திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
பேட்டை காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). தொழிலாளியான இவா், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், விசாரணைக்குச் சென்ற போலீஸாா், சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறியபோது அவா்கள் மறுத்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனா்.
குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்குப் பணியாளா் இசக்கியம்மாள், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து, மாணிக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


