நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

துடுப்பதி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:02 am IST

துடுப்பதி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி அருகே பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா் அறுமுகம் என்ற ஆரான்(70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த 4-10-2023 அன்று அப்பகுதியைச் சோ்ந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுமுகம் என்ற ஆரானுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.