அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

குடிநீா்த் தொட்டியை அகற்றக் கோரி அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

எடப்பாடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:05 am IST

எடப்பாடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட, வெள்ளரி வெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளி வளாகத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு கிராம பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை அகற்றக் கோரி கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு புதிய நீா்த்தேக்கத் தொட்டியை அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் புதன்கிழமை அப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 எடப்பாடி அருகே வேட்டுவப்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

எடப்பாடி அருகே வேட்டுவப்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.