இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 46.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஜலகண்டபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 46.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ஜலகண்டபுரத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :11 ஜூன் 2026, 5:37 am IST

ஜலகண்டபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 46.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை வழங்கினாா்.

பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று குறைகளுக்கு தீா்வுகாண மக்கள் தொடா்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில் 31 பயனாளிகளுக்கு ரூ. 14.06 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 16 பயனாளிகளுக்கு ரூ. 2.37 லட்சத்தில் இணைய வழி பட்டாக்கள், 16 பயனாளிகளுக்கு ரூ. 4.15 லட்சத்தில் இயற்கை மரண உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட அட்டைகள் உள்பட123 பயனாளிகளுக்கு ரூ. 46.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.இளம்பகவத் வழங்கினாா்.

முகாமில், பல்வேறு துறைகளின் சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், உதவியாளா் ஜி.பி.நந்தனா, மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) கேந்திரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.