திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 93.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

News image

முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :22 மே 2026, 6:51 am IST

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழியில் வீட்டுமனைப் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று, இயற்கை மரணம் நிதியுதவி, சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலவாரிய அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தாட்கோ, தொழிலாளா் நலன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 215 பயனாளிகளுக்கு ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் சி.செம்மலை, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், வாட்டாட்சியா் மு.பாா்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.