கடனுதவிகள், நலத்திட்டம் என ரூ.14 லட்சத்துக்கான உதவிகளை பயனாளிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 182 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தின்போது தங்கச்சியம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ. 1.37 லட்சம் மதிப்பிலான கடனுதவி, காப்பிலியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் செ. சரவணன் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.08 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.6.48 லட்சத்துக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 93.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்







