/

எடப்பாடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

எடப்பாடியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பணியாளா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

எடப்பாடியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தொடங்கிய இந்த ஊா்வலம், எடப்பாடி வெள்ளாண்டிவலசு, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் நெடுஞ்சாலை ஆய்வு மாளிகையை அடைந்தது.

ஊா்வலத்தில், ஹெல்மெட் அணிவதன் அவசியம், வாகனத்தில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊா்வலமாக சென்றனா்.

இதில் உதவி கோட்டப் பொறியாளா் குபேந்திரன், உதவி பொறியாளா் பிருந்தா, சாலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.