டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயிலில் பிப். 17இல் மாசி பொங்கல் விழா தொடக்கம்

News image
வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :25 ஜனவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி உள்ள மூன்று மாரியம்மன் கோயில்களிலும் மாசி பொங்கல் திருவிழா நடத்துவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் பிப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் நடுதல் விழாவை தொடங்குவது என்றும், மாா்ச் 3இல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தல், 4-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல் விழாவை நடத்துவது என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பட்டக்காரா், ஊா்க்கவுண்டா், சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.