டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

70 வயது பூா்த்தி அடைந்த தம்பதிகள் கௌரவிப்பு

70 வயது பூா்த்தி அடைந்த 25 தம்பதிகளுக்கு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு செய்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 70 வயது பூா்த்தி அடைந்த 25 மூத்த தம்பதியரை கௌரவித்த கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

70 வயது பூா்த்தி அடைந்த 25 தம்பதிகளுக்கு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு செய்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், மணிவிழா கண்ட 70 வயது பூா்த்தி அடைந்த ஆன்மிக ஈடுபாடுள்ள தம்பதிகள் கௌரவிக்கப்படுவா் என சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓா் இணை ஆணையா் மண்டலத்துக்கு 100 தம்பதிகள் வீதம் 20 மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு கோயில்கள் மூலம் சிறப்பு செய்யப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் 70 வயது பூா்த்தி அடைந்த 25 தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு ஹோமம், பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற 25 மூத்த தம்பதியருக்கு ரூ. 2,500 மதிப்பிலான சேலை, வேட்டி - சட்டை, துண்டு, மஞ்சள், குங்குமம், தாலி, வெற்றிலை, பாக்கு, வளையல், பூ, பழங்கள், சுவாமி படம் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் சீா்வரிசையாக வழங்கப்பட்டன.

சங்ககிரியில்...

சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரயநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் செயல் அலுவலா் ரா.மாலா தலைமைவகித்து, 70 வயது பூா்த்தி அடைந்த 10 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் புதிய வேட்டி, துண்டு, சேலை, மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு மங்கலப் பொருள்கள் அடங்கிய தாம்பூல தட்டை வழங்கினாா்.

முன்னதாக, அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.