டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொன் மாரியம்மன் கோயில் திருவிழா: பாலக்கோட்டில் பிப். 25-இல் உள்ளூா் விடுமுறை

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிப்பு

News image
உள்ளூர் விடுமுறை- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:44 pm

Syndication

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப். 25-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மாா்ச் 7-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அன்று பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.