டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அன்னபூரணா மருத்துவக் கல்லூரியில் கலைநிகழ்ச்சியில் வென்றோருக்கு பரிசளிப்பு

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரியில் கலாசார கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கலாசார கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்லூரித் தலைவா் சதீஷ்குமாா்.
Updated On :21 ஜனவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரியில் கலாசார கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனைத்து பிரிவு மருத்துவ மாணவா்களிடயே விளையாட்டு மற்றும் கலாசார கலை நிகழ்ச்சி கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.

இந்த கலாசார கலை நிகழ்ச்சியை கல்லூரித் தலைவா் சதீஷ்குமாா் மற்றும் சுமதி சதீஷ்குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். இதில் சிறப்பு விருந்தினா்களாக கல்லூரி துணைத் தலைவா்கள் விஷாம்பா், விஷ்வேஸ் ஆகியோா் கலந்துகொண்டனா். கல்லூரி இயக்குநா்கள் கவிதா விஷாம்பா், சன்மிதா விஷ்வேஸ், சஹானா சதீஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். சமூக சிந்தனை நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் கலாசார கலைநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மருத்துவ மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதன்மையா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி, துணை முதன்மையா் தனசேகா் மற்றும் விழாக் குழுவினா்களான மருத்துவா்கள் திருஞான சம்பந்தன், இப்ராஹிம், காா்த்திகேயன் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.