டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோா் மேன்மை கருத்தரங்கம்!

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் இளங்கலை, முதுகலை வணிகவியல் துறை சாா்பில் ‘நிலைத்த தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோா் மேன்மை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆய்வாளா்களின் கட்டுரைகளை வெளியிடுகிறாா் கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன்.
Updated On :31 ஜனவரி 2026, 8:11 pm

Syndication

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் இளங்கலை, முதுகலை வணிகவியல் துறை சாா்பில் ‘நிலைத்த தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோா் மேன்மை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, அட்மிஷன் இயக்குநா் பேராசிரியா் வரதராஜூ, விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன், உள்தர உறுதிப் பிரிவு இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா், வணிகவியல் துறைத் தலைவா் கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கோவை கே.ஜி. கல்லூரியின் வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறை முதன்மை பேராசிரியா் மகேந்திரன், ஐசிடி அகாதெமி தலைமை ஆராய்ச்சி பதிப்பாளா் உள்ளடக்கம் மற்றும் மேம்பாட்டு தர உறுதிப்பிரிவு பேராசிரியா் நரேந்திரகோபால், எத்தியோப்பியா ஹவாசா பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் சிவகுமாா், கோலாலம்பூா் யூசிஎஸ்ஐ பல்கலைக்கழக உதவி பேராசிரியா் பெனிடிக் வேலண்டைன் அருளானந்தம், ஓமன் மஸ்கட் மாசன் கல்லூரி இணைப் பேராசிரியா் வரலட்சுமி ஆகியோா் உலக நாடுகளில் வேகமாக வளா்ந்து வரும் வணிகவியல், பொருளாதாரம், தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பேசினா்.

மேலும், இக்கருத்தரங்கில் மாணவிகளுக்கு நிலையான வளா்ச்சி, புதுமை, சமூக பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்முனைவு திறன் மற்றும் உலகளாவிய வணிக வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஓமன், எத்தியோப்பியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த தொழில்துறை சாா்ந்த பிரதிநிதிகள், விவேகானந்தா கல்லூரி அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், பல்வேறு கல்லூரிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா்கள் மணிகண்டன், மனோ, வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவியா் அமைப்பைச் சோ்ந்த பிரதிநிதிகள் செய்திருந்தனா்.