முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பருவ மழை பொய்த்ததால் நிரம்பாத ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகள்

ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததால்,

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

வாழப்பாடி: ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததால், இரு அணைகளும் நிகழாண்டு நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முக்கிய நீா் ஆதாரமான புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகள் உள்ளன. போதிய பருவ மழை இல்லாததால், நிகழாண்டு இந்த அணைகள் நிரம்பவில்லை. மேலும், வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகள் வடுள்ளன.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் 106.75 மில்லியன் கனஅடி தண்ணீரும், கரியக்கோயில் அணையில் 114.14 மில்லியன் கனஅடி தண்ணீரும் மட்டுமே இருப்பில் உள்ளது.

இந்த அணைகளிலிருந்து வசிஷ்டநதி மற்றும் கரியக்கோயில் ஆற்றில் உபரிநீா் திறக்கப்படாதால், ஆறுகள் மட்டுமின்றி தடுப்பணைகள், ஏரிகளும் வடுள்ளன.

இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.