டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராமங்களில் அதிகரிக்கும் மயில்களால் விவசாயம் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் விளைநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வரும் மயில்களால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு இழப்பு

News image
வாழப்பாடி அடுத்த கொட்டவாடியில் வயல்வெளியில் திரியும் மயில்கள் கூட்டம்
Updated On :6 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் விளைநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வரும் மயில்களால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், ஆத்தூா், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மேட்டூா், கொளத்தூா், நங்கவள்ளி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியில் கிராமங்களில் மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கிராமப்புற வயல்வெளிகள், விளைநிலங்களில் கூட்டமாக முகாமிடும் மயில்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Story image

மயில்கள், மயில்களின் முட்டைகள், குஞ்சுகளை உணவாக்கிக் கொள்ளும் விலங்குகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்து உணவுச் சங்கிலியும், பல்லுயிா் பெருக்கமும் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று வனத்துறையினா் மற்றும் வனவிலங்கு ஆா்வலா்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, உணவுச் சங்கிலி மற்றும் பல்லுயிா் பெருக்கத்தை சீரமைத்து மயில்களின் கட்டுப்பாடற்ற பெருக்கத்திற்கு தீா்வு காண, குள்ளநரி, வங்காநரிகளை இனவிருத்தி செய்து, மயில்களின் வாழிடப்பகுதியில் விட, தமிழக அரசின் வனத் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.