அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலா்களை இணைக்க வேண்டும்: மாநிலத் தலைவா் வேண்டுகோள்
தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலா்கள், பணியாளா்களையும் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜான் போஸ்கோ பிரகாஷ், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










