/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் 97 ஆம் ஆண்டாக ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் சிவன், பாா்வதி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலை ஸ்ரீசிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீநடராஜா் திருவீதி உலா நடைபெறுகிறது.