போளூா் கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை
போளூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:32 pm

போளூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போளூா் நகராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை முதல் மாலை வரை பெண் பக்தா்கள் ஏக தின லட்சாா்ச்சனை செய்து வழிபட்டனா்.
நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சங்கா், கோயில் சிவாச்சாரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...